புதன்கிழமை, அக்டோபர் 14
Shadow

பலாத்காரத்திற்கு பின் தங்கையை கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடிய அண்ணன்களை திமுகவில் இருந்து நீக்கினார் ஸ்டாலின்!

 

 

தங்கை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடிய அண்ணன்களை திமுகவில் இருந்து நீக்கினார் ஸ்டாலின்!

செங்கல்பட்டு நைனார்குப்பம் பகுதியை சேர்ந்த இளம்பெண்
தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சசிகலாவின் அண்ணன் முறை வரும் தேவேந்திரன், புருஷோத்தமன் இருவரும் தங்கை சசிகலா குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அதை காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்ந்து நடந்ததால் சசிகலா கடும் எதிர்ப்பு காட்டியதால் அவரை கழுத்தை நெறித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு “தற்கொலை” செய்து கொண்டதாக நாடகம் ஆடியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த மரணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் தப்பி ஓடிவிட்டனார். இவர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் இவர்கள் இருவரும் திமுக இளைஞர் அணியில் அந்த பகுதி நிர்வாகிகளாக இருந்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததும் திமுக இளைஞர் அணியில் இருந்தும், கட்சியில் இருந்தும் இருவரையும் நீக்கி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.


இது குறித்து இளைஞரணி நிர்வாகி உதயநிதி ஸ்டாலின் “செங்கல்பட்டு நைனார்குப்பம் சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் இளைஞரணி நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தீர விசாரிக்கவேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையை திமுக இளைஞரணி வலியுறுத்தும் என டிவிட்டர் பதிவு வெளியிட்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
கூடவே #JusticeForSasikala என ஹேஷ்டாக்கும் போட்டிருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன