Tuesday, August 4
Shadow

கொரானாவுக்கு அவசரகதியில் தடுப்பூசி அறிவித்தால் உலக அரங்கில் அசிங்கப்படுவோம் – நிபுணர்கள் எச்சரிக்கை

187 Views

 

 

கொரானாவுக்கு அவசரகதியில் தடுப்பூசி அறிவித்தால் உலக அரங்கில் அசிங்கப்படுவோம் – நிபுணர்கள் எச்சரிக்கை

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்க்கப்படுகிற கொரானா தடுப்பூசி
ஆகஸ்ட் 15-ஆம் தேதி பொதுப் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்துடன், மனிதர்களின் மீதான சோதனைகள் முடிக்கப்பட்டு நாடு முழுதும் உள்ள மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தயாராகும் முதல் தடுப்பு மருந்து இது. இதனால் இது மத்திய அரசு மேற்பார்வையில் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்புடன் தயாராகி வருகிறது. அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று  கூறப்படுகிறது.

அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து பரிந்துரைகளும் கூட, இந்த வருடத்தின் முடிவில் வெளியாகும் என இருக்கும் நிலையில் கோவாக்ஸின் ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு மத்திய மருந்து தரநிர்ணய கட்டுப்பாட்டு கழகத்தின் மனிதர்களின் மீதான பரிசோதனையான முதல் கட்டம், 2-ஆம கட்ட  பரிசோதனைக்கு அனுமதி உள்ளது.

ஜூலை 13-ஆம் தேதி முதல் கட்ட சோதனையை திட்டமிட்டுள்ளதன்படி, 1, 125 பேரின் மீது பரிசோதிக்கப்பட உள்ளது.

ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனாவுக்கான கோவாக்ஸின் தடுப்பூசி தயாராகி விடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவிப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களுக்கு இன்னும் சோதனை நடத்தப்படாத நிலையில் ஆய்வுக்குரிய நேரத்தை அளிக்காமல் தேதியை அறிவித்தது குறித்து பல்வேறு மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் நோயின் தீவிரமானப் பரவல் மற்றும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள நாடு தழுவிய அவசர நிலையால், தடுப்பூசியை விரைவாக பரிசோதிக்க , அதன் உரிமம் பெற்ற நிறுவனத்துககு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நெருக்குதல் அளித்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.


இந்தியாவில் சுகாதார ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும் நன்கு அறியப்பட்ட வைராலஜிஸ்ட் மற்றும் வெல்கம் டிரஸ்ட்-டிபிடி கூட்டணியின் தலைமை நிர்வாகி ஷாகித் ஜமீல், “ஆகஸ்ட் 15 காலக்கெடு என்பது  அபத்தமானது” என கூறினார்.

 

மேலும் அவர் கூறும் போது உலகளாவிய விஞ்ஞான சமூகம் இதற்காக நம்மைப் பார்த்து சிரிக்கும் என்று நான் அஞ்சுகிறேன். அது நடந்திருக்கக்கூடாது. இந்தியா அறிவியலில் தீவிரமான வீரர். நாம் இப்படி நடந்து கொண்டால் யார் நம்மை நம்பப் போகிறார்கள்? நாளை நாம் ஒரு நல்ல தடுப்பூசியைக் கொண்டு வந்தாலும் யார் நம்மை  நம்பப் போகிறார்கள்?… மேலும் கடிதத்தில் பயன்படுத்தப்படும் மொழியைப் பார்த்து நான் திகைக்கிறேன். இது ஒரு கடிதம் அல்ல, அது மிரட்டல் போல உள்ளது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *