ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

21 கோடிக்கு லைகா வாங்கிய ஸ்பைடர்… கவிழ்க்குமா கல்லா கட்டுமா..?!

தெலுங்கு பட உலகில் இளைய தலைமுறை நடிகர்களில் பவன் கல்யாண், மகேஷ்பாபுஜீனியர் NTR, ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர்.

மகேஷ்பாபு, ராகுல் பிரீத்தி சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் ஆகியோர் நடித்துள்ள ஸ்பைடர் படத்தை தமிழ் இயக்குனர் A .R .முருகதாஸ் இயக்கியுள்ளார்.
மகேஷ்பாபு இதற்கு முன் நடித்து வெளியான பிரமோற்சவம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியபடம்.
இந்த சூழலில் ஸ்பைடர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள “ஸ்பைடர் “மகேஷ்பாபு பிறந்த நாளான செப்டம்பர்27 அன்று உலகம் முழுவதும் ரீலீஸ் செய்யப்படுகிறது.

மகேஷ்பாபு நடித்த படங்கள் 150 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்படுகிறது. அதேவேளை ஸ்பைடர் படத்துக்கு 145 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக கூறுகின்றனர்.

மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரீலீஸ் செய்யப்பட்டதில் கிடைத்த வருவாய் லட்சக்கணக்கில் மட்டுமே..

முதல் முறையாக ARமுருகதாஸ் இயக்கம் என்பதால் நேரடி தமிழ் படமாக “ஸ்பைடர் ” எடுக்கப்பட்டுள்ளது என்கிறார் தயாரிப்பாளர் பிரசாத். தெலுங்கில் ஸ்பைடர் 84 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

FMS உரிமை சுமார் 20 கோடிக்குள்ளாக வியாபாரமாகியி ருக்கலாம் என தெரிகிறது
தமிழ்நாடு, கர்னாடகாவில் ஸ்பைடர் படத்தை வெளியிடும் விநியோக உரிமையை 21 கோடிக்கு லைக்கா வாங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஏரியாவில் எம்.ஜி அடிப்படையிலும் சில பகுதிகள் விநியோக முறையிலும் லைக்கா நிறுவனம் தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில் வியாபாரத்தை முடித்துள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரிப்பு துறையில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பிடத்தக்க வெற்றியை தமிழ் சினிமாவில் லைக்கா பதிவு செய்ய இயலவில்லை. ஸ்பைடர்லைக்காவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லுமா.இல்லை லைக்க செண்டிமெண்ட் மகேஷ்பாபுவை தொற்றிக் கொள்ளுமா என்பதை பார்ப்போம்.

ஏரியா அடிப்படையில் விலை நிலவரம் : சென்னை – 1.50 கோடி, செங்கல்பட்டு – 4கோடி, கோவை-3.50 கோடி, மதுரை – 2 .50 கோடி, சேலம் – 1.70 கோடி, தநல்லை – 1.10 கோடி,
வட, தென்னாற்காடு – 2 கோடி.

– ராமானுஜம்

736 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன