திங்கட்கிழமை, மே 4
Shadow

வைரஸ் பாதிப்பில் உலக அரங்கில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3வது இடத்துக்கு போனது!

வைரஸ் பாதிப்பில் உலக அரங்கில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3வது இடத்துக்கு போனது!

உலக அளவில் கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்ட டாப் 10 நாடுகளில் இந்தியா கடந்த மே மாதம் 11வது இடத்தில் இருந்தது. நாடுமுழுதும் வைரஸ் பரவலின் வேகம் அதிகமாக இருந்ததால் 11வது இடத்தில் இருந்த இந்தியா நேற்றுமுன்தினம்வரை 4ம் இடத்திற்கு முன்னேறியது.
இந்த சூழலில், நேற்று வைரஸ் பரவலின் வேகம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்ததாலும் 3ம் இடத்தில் இருந்த ரஷ்யாவில் வைரஸ் பரவல் மெல்ல கட்டுக்குள் வருவதாலும் இந்தியா 3வது இடத்திற்கு சென்றது. பிரேசில் 2ம் இடத்திலும், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் நீடிக்கிறது.

ரஷ்யாவில் 681251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21492 பேர் புதிதாக கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 413 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 19692 பேர் கொரானாவால் உயிரிழந்துளளனர். ஆனால் ரஷ்யாவில் இதுவரை கொரானா பலி எண்ணிக்கை 10161. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 134 பேர் வைரஸ் தொற்றால் பலியாகி உள்ளனர்.

உலகிலேயே அமெரிக்காவில் தான் மிக அதிகமாக 29,57,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு அங்கு 1,32,405 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். தொடர்ந்து 15,63,235பேர் கொரானா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 15,78,376 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 64365 பேர் இறந்துவிட்டனர்.
அதிக பலி எண்ணிக்கையை சந்தித்த நாடுகள் பட்டியலில் இந்தியா நேற்று 610 பேருடன் 3வது இடத்தையும், 1111 பேருடன் பிரேசில் முதல் இடத்தையும், 654 பேருடன் மெக்ஸிகோ 2வது இடத்தையும், 254 பேருடன் அமெரிக்கா 4வது இடத்தையும் பிடித்திருந்தது. பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருந்தாலும் பலி எண்ணிக்கையை அமெரிக்கா கடுமையாக போராடி குறைத்து வருகிறது.

279 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன