திங்கட்கிழமை, மே 4
Shadow

வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கும்!

 

வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கும்!

கொரானா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் இணையம் மூலமாக மனு தாக்கல் செய்தல், காணொலி மூலமாக முறையீடு, பட்டியலிடுதல் மற்றும் விசாரணை தொடர்பாக அனைத்து அமல்படுத்த வேண்டிய புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமையான இன்று முதல் வழக்கு விசாரணைகள் காணொலி அமர்வில் தொடர்ந்து நடைபெறும். ஏற்கனவே பட்டியலிட முடியாமல் நிலுவையில் உள்ள மனுக்கள் இன்று முதல் காணொலி அமர்வுகளில் பட்டியலிடப்படும். வருகிற 13-ந் தேதியில் இருந்து தேவையின் அடிப்படையில் சார்பு மனுக்கள் மற்றும் இடைக்கால மனுக்கள் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும், மற்ற நாட்களில் இறுதி விசாரணைக்கான மனுக்களும், ஏற்கனவே விசாரணையில் உள்ள மனுக்களும் பட்டியலிடப்படும்.

தற்போதைக்கு தேசிய தகவல் மையத்தின் வழியாக செயல்படும் ‘வீடியோ’ செயலி மூலம் காணொலி வழியாக வழக்குகள் விசாரிக்கப்படும். காணொலி செயல்படாத நிலையில் ‘டெலி கான்பரன்ஸ்’ வழியாக வழக்குகள் விசாரிக்கப்படும். காணொலி அமர்வுகளில் ஆஜராகும் அனைவரும் உடை மற்றும் பேக்ரவுண்ட் விஷயங்களில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

278 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன