புதன்கிழமை, மே 15
Shadow

விதிகளை காற்றில் பறக்கவிட்டு பப்ளிசிட்டிக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகை ரோஜா…!

பப்ளிசிட்டிக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகை ரோஜா…!

தமிழ் திரையுலகில் இருந்து ஆந்திர அரசியலுக்கு சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர்.

தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

நடிகை என்பதால் அடிக்கடி ஏதாவது பப்ளிசிட்டி செய்து தன் இருப்பை காட்டிக் கொள்வது வழக்கம்.

கொரானா பரவல் ஆரம்பத்தில் கிராமத்தில் கிருமி நாசினி அடிக்கிறேன் பேர்வழின்னு ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஊழியர்கள் பயன்படுத்தும் கவச உடை அணிந்து நகரி கிராமத்தில் காமெடி செய்து பப்ளிசிட்டி தேடிக் கொண்டவர் ரோஜா.

இப்போது அப்படி ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் விஷயம்தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் தொடங்கி உள்ளார்.

நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடந்தது. இதில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். அப்போது மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை 20 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்றார்.

இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“ரோஜா சாகசம் செய்வதற்காக ஆம்புலன்சை ஓட்டி உள்ளார். அவசர கால ஊர்தியை ஓட்ட அவருக்கு லைசென்ஸ் உள்ளதா?” என தெலுங்கு தேசம் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதே, நேரம் கொரானா பரவல் அதிகமாக இருக்கும் இந்த சூழலில் வீட்டில் இருந்து வெளியில் வந்தால் மாஸ்க் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் காட்டுக்கூச்சல் போட்டு வருகிறது.

ஒரு பொறுப்பான மக்கள் பிரதிநிதி இப்படி பொறுப்பில்லாமல் விளம்பரத்திற்காக அவசர உறுதியான ஆம்புலன்ஸ் ஓட்டியதும், அப்படி ஓட்டும் போது மாஸ்க் எதையும் அணியாமல் அருகில் பலரை அமர்த்தி கொண்டு அவர்களும் மாஸ்க் அணியாமல் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

680 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன