சனிக்கிழமை, மே 2
Shadow

இந்தியாவில் வைரஸ் தடுப்பூசி இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு முன்னேற்றம்!

இந்தியாவில் வைரஸ் தடுப்பூசி இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு முன்னேற்றம்!

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மிக வேகமாக இருக்கிறது.

இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு என்பது அதிர வைப்பதாக அமைந்திருக்கிறது. தொற்று பாதிப்புக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கையும் 10 லட்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தடுப்பூசி ஒன்றுதான், இந்த பரவலை தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.

இந்தியாவில் இப்போது 2 தடுப்பூசிகள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியையும், ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனம் ஜைகோவ்-டி என்னும் தடுப்பூசியையும் உருவாக்கி உள்ளன.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி, கொரானா வைரஸ் திரிபுவில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசி, டி.என்.ஏ. அடிப்படையிலானது ஆகும்.

இவ்விரு தடுப்பூசிகளையும் அந்தந்த நிறுவனத்தினர் விலங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்த்து உள்ளனர். இந்த சோதனைகளில் அந்த தடுப்பூசிகள் நம்பகமானவை, பாதுகாப்பானவை, நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் ஆற்றல் கொண்டவை என்று நிரூபிக்கப்பட்டு விட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தடுப்பூசிகளை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தனது ஒப்புதலை வழங்கி விட்டது. இதற்கான அதிதீவிர நடவடிக்கையில் இரு நிறுவனங்களும் இறங்கி உள்ளன.

இந்த நிலையில் ஜைடஸ் கேடிலா நிறுவனம், தனது தடுப்பூசியை 1000 பேருக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.

முதல் இரு கட்ட தடுப்பூசி மருத்துவ பரிசோதனையை தொடங்கி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

ஏற்கனவே ரஷ்யாவில் மனிதர்கள் மீதான தடுப்பூசியை இரண்டாம் கட்ட பரிசோதனை 20ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

414 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன