ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

சாத்தான்குளம் சம்பவத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் பெண் போலீஸ் கைதாக வாய்ப்பு!?

 

கொலை சம்பவத்தை குழப்ப சிபிசிஐடிக்கு ஒரு மாதிரியும், சிபிஐ விசாரணையில் வேறு மாதிரியும் சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் போலீஸ் கைதாகலாம்?!

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அதற்கு முன்னதாக இவ்வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்தனர்.

அப்போது பெறப்பட்ட சாட்சியங்கள், திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் சிபிசிஐடி போலீஸ் ஒப்படைத்து விட்டது.

இந்த நிலையில் சிபிசிஐடி அதிகாரிகளுடன் சிபிஐ அதிகாரிகள் நேற்று 4 மணி நேரம் ஆலோசனை செய்தனர். சிபிசிஐடி விசாரணையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை சிபிஐ விசாரணையுடன் ஒப்பிட்டும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் பெண் போலீஸ் அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதாக கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணையில் சாத்தான்குளம் காவல் நிலைய பெண்  போலீஸ் ஒருவர் முரண்பட்ட தகவல் அளித்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து விசாரணையை குழப்பி திசை திருப்பி போலீசாரை தப்ப வைக்க திட்டமிட்டு தகவல்களை மாற்றி மாற்றி சொன்ன அந்த பெண் போலீஸ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்துகிறது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 காவலர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணை கைதிகளை தாக்கியது ஏன்? எவ்வாறு தாக்கப்பட்டனர்? உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தலைமை பெண் போலீஸ் ஏட்டு ரேவதி கொடுத்த சாட்சியம் மிக வலுவாக உள்ள நிலையில் இன்னொரு பெண் போலீஸ் அதை மாற்றி சொல்லி குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியில் செயல்பட்டதால் அந்த பெண் போலீஸ் கைது செய்யப்பட்டு மீண்டும் விசாரிக்கப்பட உள்ளார் என தெரிகிறது.

486 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன