
ஒரே நாளில் அடுத்தடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு!
தமிழகத்தில் கொரானா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரானா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே 15 எம்எல்ஏக்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 16-வதாக ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. ஆர்.காந்திக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா உறுதியானதை அடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக திமுக எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், கார்த்திகேயன் ஆகியோருக்கும் கொரானா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து ஒரே நாளில் அடுத்தடுத்து 3 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ளது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அமைச்சர்கள் அன்பழகன், செல்லூர் ராஜு ஆகியோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
