சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: கொரானா வைரஸ்

முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை

முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த போது அங்கே பணியாற்றிய சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினி உடனடியாக படப்பிடிப்பில் இருந்து ஓட்டல் திரும்பினார். பின்னர் ரஜினிக்கு வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் திடீரென ரத்த அழுத்த பாதிப்பால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்தின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் வந்துவிட்டன என்றும் அவற்றில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்றும் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை இன்று காலை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று மதியம் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அதன் பின்னர் அவரை டிஸ்சார்ஜ் செய்தார்கள். அவருக்கு ரத்த அழுத்தம்...
ஒரே நாளில் அடுத்தடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு!

ஒரே நாளில் அடுத்தடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஒரே நாளில் அடுத்தடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு! தமிழகத்தில் கொரானா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரானா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே 15 எம்எல்ஏக்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 16-வதாக ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. ஆர்.காந்திக்கு  கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரானா உறுதியானதை அடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக திமுக எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், கார்த்திகேயன் ஆகியோருக்கும் கொரானா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது. ...
வைரஸ் தொற்றால் பலியான ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்க வேண்டும் முதல்வருக்கு TMJA கோரிக்கை

வைரஸ் தொற்றால் பலியான ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்க வேண்டும் முதல்வருக்கு TMJA கோரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *வைரஸ் தொற்றால் பலியான ராஜ் TV ஒளிப்பதிவாளர் திரு.வேல்முருகன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை* *ராஜ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திரு.வேல்முருகன் வைரஸ் தொற்றால் மரணம். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது* கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு அரசின் காப்பீடு இருக்கிறது. ஆனால், எவ்வித சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பும் இல்லாமல் இரவும் பகலுமாக அவர்களுக்கு ஈடாக பத்திரிகையாளர்களும் கொரானா விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்- ஊடகவியலாளர்களின்...
இந்தியாவில் கொரானா வைரஸ் செப்டம்பரில் மறையுமாம் ஆராய்ச்சியாளர்கள் கருத்து!

இந்தியாவில் கொரானா வைரஸ் செப்டம்பரில் மறையுமாம் ஆராய்ச்சியாளர்கள் கருத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இந்தியாவில் கொரானா வைரஸ் செப்டம்பரில் மறையுமாம் ஆராய்ச்சியாளர்கள் கருத்து! இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரானா தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் என சுகாதார அமைச்சகத்தின் இரு பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கணிதமுறை மாதிரி ஆய்வின் படி அவர்கள் இதைக் கூறுவதாகத் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டதன்படி, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, தொற்றால் இறந்தவர்கள் மற்றும் குணமடைந்த எண்ணிக்கையுடன் சரிசமமாகும்போது, அதன் குணம் 100 சதவிகித வரம்பை எட்டி, தொற்றுப்பரவல் மறையும் என்று இந்த ஆய்வு தெரிவிப்பதாகக் கூறுகின்றனர். இந்த ஆய்வு, எபிடெமியாலஜி இண்டெர்நேஷனல் என்னும் ஆய்விதழில் மருத்துவர் அனில் குமார் மற்றும் ரூபாலி ராய் ஆகிய இரு பொது சுகாதார மருத்துவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. பெய்லி கணிதமாதிரி முறையில் செய்யப்பட்ட...
104 வயதானவர் மீண்டதால் நம்பிக்கை… கொரானா பிடியில் சிக்கினாலும் மீள முடியும்..!

104 வயதானவர் மீண்டதால் நம்பிக்கை… கொரானா பிடியில் சிக்கினாலும் மீள முடியும்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  104 வயதானவர் மீண்டதால் நம்பிக்கை... கொரானா பிடியில் சிக்கினாலும் மீள முடியும்..! உலகை அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் பிடியில் இருந்து நிச்சயமாக மீள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது சில நிகழ்வுகள். அமெரிக்காவின் ஓர்கான் மாகாணத்தின் லிபனோன் நகரைச் சேர்ந்த வில்லியம் லாப்சீஸ்(104) இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு கடந்த மார்ச் 10-ம் தேதி கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கொரானா தொற்று உறுதியானது. தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் என்ன நம்பிக்கை என்கிறீர்களா... இவருக்கு கடந்த புதன் கிழமை 104-வது பிறந்த நாள் எனவும் வில்லியம் லாப்சீஸ், மகள் கரோலி ப்ர...
தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை பள்ளி,கல்லூரி,தியேட்டர்கள் என மக்கள் கூடுமிடங்கள்  அனைத்துக்கும் “கொரானா” வால்  விடுமுறை.!

தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை பள்ளி,கல்லூரி,தியேட்டர்கள் என மக்கள் கூடுமிடங்கள் அனைத்துக்கும் “கொரானா” வால் விடுமுறை.!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை அனைத்தும் விடுமுறை.. *கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அரங்குகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களை மூட தமிழக அரசு உத்தரவு.. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடக்கும்.....
கொரானா பரிசோதனை தனியார் ஆஸ்பதிரிகள் செய்யக்கூடாது – தமிழக அரசு உத்தரவு

கொரானா பரிசோதனை தனியார் ஆஸ்பதிரிகள் செய்யக்கூடாது – தமிழக அரசு உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பரிசோதனை தனியார் ஆஸ்பதிரிகள் செய்யக்கூடாது - தமிழக அரசு உத்தரவு உலகம் முழுதும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ள கொரானா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகள் செய்யப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தொற்றுநோய் சட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜே‌‌ஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிக்க மற்றும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்தியேக வார்டு அல்லது அறை வைத்து பராமரிக்க வேண்டும். பரிசோதனையின்போது அந்த நபர் கடந்த 28 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றிருந்தாலோ, வெளிநாட்டுக்கு சென்று, கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லாமல் இருந்தால் 14 நாட்...
எனக்கெல்லாம் கொரானா வரவே வராது – சொல்கிறார் நித்தி!

எனக்கெல்லாம் கொரானா வரவே வராது – சொல்கிறார் நித்தி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எனக்கெல்லாம் கொரானா வரவே வராது - சொல்கிறார் நித்தி! சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடத்தல் வழக்கில் குஜராத் போலீசார் நித்யானந்தாவை தேடியபோது அவர் பெண் சீடர்களுடன் வெளிநாடு தப்பி ஓடியது தெரிய வந்தது. ஈக்வேடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையே கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. நித்யானந்தாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை போலீசார் நாடினர். இதையடுத்து புளூ கார்னர் நோட்...
வாடிகனில் கொரானா பீதி பிரார்த்தனையை தனிமையில் நடத்திய போப்!

வாடிகனில் கொரானா பீதி பிரார்த்தனையை தனிமையில் நடத்திய போப்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலகையே பயங்கர பீதிக்குள்ளாக்கியுள்ள கொரானா வைரஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான இத்தாலிதான் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இந்த கொடிய வைரசுக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 7,375 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடான வாடிகன் நகரிலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். வைரஸ் பரவாமல் தடுக்க இத்தாலி அரசு மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கைகளை வாடிகன் நகரமும் பின்பற்றி வருகிறது. 108 ஏக்கர் பரப்பளவு கொண்ட வாடிகன் நகரில் அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும் அங்குள்ள தேவாலயங்களில் நடத்தப்படும் பிரார்த்தனை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாடிகன் நகரமே வெறிச்சோடி காணப்படுகிற...
கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை – ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை

கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை – ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை - ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸ் தற்போது உலகின் 90-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 380 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாலை நிலவரப்படி, இந்தியாவிலும் 34 பேருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுதும் படுவேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து டெல்லியில் மத்திய மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு கூட்டம் நடத்தினார். மத்திய சுகாதாரத்துறை மந்...