சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை

 

முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த போது அங்கே பணியாற்றிய சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினி உடனடியாக படப்பிடிப்பில் இருந்து ஓட்டல் திரும்பினார்.

பின்னர் ரஜினிக்கு வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் திடீரென ரத்த அழுத்த பாதிப்பால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரஜினி அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்தின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் வந்துவிட்டன என்றும் அவற்றில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்றும் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை இன்று காலை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இன்று மதியம் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அதன் பின்னர் அவரை டிஸ்சார்ஜ் செய்தார்கள்.

அவருக்கு ரத்த அழுத்தம் அளவுக்கும் அதிகமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் நேற்று கூறப்பட்டிருந்தது.

அவரைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாரத்திற்கு ஓய்வும், இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தல்

கொரோனா தொற்று ஏற்படும் சூழல்களில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் விலகியிருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்த்தி டிஸ்சார்ஜ் செய்தார்கள்.

இதையடுத்து உடனடியாக ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் ரஜினி.

205 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன