வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

கொரானா பரிசோதனை தனியார் ஆஸ்பதிரிகள் செய்யக்கூடாது – தமிழக அரசு உத்தரவு

 

 

கொரானா பரிசோதனை தனியார் ஆஸ்பதிரிகள் செய்யக்கூடாது – தமிழக அரசு உத்தரவு

உலகம் முழுதும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ள கொரானா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகள் செய்யப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக
தொற்றுநோய் சட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜே‌‌ஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிக்க மற்றும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்தியேக வார்டு அல்லது அறை வைத்து பராமரிக்க வேண்டும்.

பரிசோதனையின்போது அந்த நபர் கடந்த 28 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றிருந்தாலோ, வெளிநாட்டுக்கு சென்று, கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லாமல் இருந்தால் 14 நாட்கள் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தவேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருந்தால் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பான விவரங்களை சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் சுகாதார அதிகாரியிடமும், பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுகாதார சேவைகள் துணை இயக்குனரிடமும் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

ஒரு நபர் கடந்த 28 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றிருந்தாலோ, வெளிநாட்டுக்கு சென்று, கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லாமல் இருந்தாலோ, அறிகுறி இருந்தாலோ அந்த நபர் தனிமைப்படுத்துவதற்கோ அல்லது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கோ மறுப்பு தெரிவித்தால் பொது சுகாதாரத்துறை இயக்குனர், ஊரக சுகாதார சேவைகள் மருத்துவ இயக்குனர், மாவட்ட கலெக்டர்கள் உள்பட வரையறுக்கப்பட்ட அதிகாரிகள் அவர்களை கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தவோ அல்லது சிகிச்சை பெறவோ நிர்ப்பந்திக்கவேண்டும். தனியார் பரிசோதனை கூடங்கள் கொரோனா வைரஸ் மாதிரி எடுக்கவோ, பரிசோதிக்கவோ கூடாது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

703 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன