செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16
Shadow

நண்பர் அஜீத் மாதிரி கோட் சூட் போட்டிருக்கேன் – மாஸ்டர் விழாவில் விஜய் கலகல

 

 

நண்பர் அஜீத் மாதிரி கோட் சூட் போட்டிருக்கேன் – மாஸ்டர் விழாவில் விஜய் கலகல

மாஸ்டர் ஆடியோ விழாவில் விஜய் பேசியதாவது…
என் நெஞ்சில் குடியிருக்கும் என் ரசிகர்களே…
எனக்கு வருத்தமாக இருக்கு. என் ரசிகர்களை இந்த இசை விழாவுக்கு அழைக்க முடியவில்லையே என்று. பிகில் பட இசை விழாவின் போது சில பிரச்சினை ஏற்பட்டது.
அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் வேற. எனவே தான் அழைக்க முடியவில்லை. அதற்கு மன்னிக்கவும்.

இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கு ஒரு குட்டி கதை இருக்கு, அனிருத் மற்றும் அருண்காமராஜ் வச்சி செஞ்சிட்டாங்க.
விஜய்சேதுபதி இந்த படத்தோட வில்லன். தமிழ் சினிமாவுல ஒரு தவிர்க்க முடியாத ஆள உருவாகி நிக்கிறாரு.

ஏன் இந்த படத்துல வில்லன் கேரக்டர் பண்ணிறிங்கன்னு விஜய்சேதுபதி கிட்ட கேட்டேன். என்னை நாலே வார்த்தையில ஆஃப் பண்ணிட்டாரு.
உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் சொல்லிட்டாரு.
மாளவிகாவுக்கு தமிழ் சினிமாவுக்கு ஏற்ற அழகான முகம். அவர் உடனே தமிழ் கத்துகிட்டாரு.

நம்ம நண்பர் அஜித் மாதிரி டிரெஸ் பண்ணிட்டு போலம்னு கோட் சூட் போட்டு வந்திருக்கேன்” என்றார் (அப்போது அரங்கத்தில் எழுந்த கைத்தட்டல் அடங்க வெகு நேரம் ஆனது)

 

921 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன