
உண்மையா இருக்கனும்னா ஊமையா இருக்கனும் – மாஸ்டர் விழாவில் விஜய் பஞ்ச்
மாஸ்டர் ஆடியோ விழாவில் விஜய் பேசும்போது ,ஒரு குட்டிக் கதையுடன் பன்ச் டயலாக் சொன்னார்.
“ஒரு சில இடத்துல விளக்கேத்தி கும்பிடுவாங்க… ஒரு சில பேர் பூ போட்டு வணங்குவாங்க… நம்மள புடிக்காத சில பேர் கல்லு விட்டு எரிவாங்க…
என் படத்துல ஒரு பாட்டு இருக்கும். நீ நதி போல ஓடிக் கொண்டிரு.
நம்ம நதி போல ஓடிக்கிட்டே இருக்கனும்.

நம் எதிரிகளை நம் வெற்றியால் கொல்லனும்.
ஒரு சில நேரத்துல உண்மையா இருக்கனும்ன்னா ஊமையா இருக்கனும்.
விழா தொகுப்பாளர் விஜய்யிடம் கேட்டார்.
20 வருசம் முன்னாடி இருந்த விஜய்யிடம் கிட்ட ஏதாச்சும் கேட்கனும்ன்னா என்ன கேட்பீங்க.
அப்போ வாழ்ந்த வாழ்க்கை வேண்டும். நிம்மதியா இருந்துச்சி… ஐடி ரெய்டு இல்லாம இருந்துச்சி என்ற போது அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.
902 Views
