
வேறு காரணங்களால் இறந்த 444 மரணங்களையும் கொரானா டெத் லிஸ்ட்டில் சேர்த்த தமிழக அரசு!
தமிழகத்தில் கொரானா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், ஒரே நாளில் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 849 பேர் உள்பட இதுவரை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 492 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, தொற்று படிப்படியாக குறைந்துவரும் நிலையில், ஒரே நாளில் 1171 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது
சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் தொடர்ந்து, 10 நாட்களாக நாள்தோறும் மூவாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரானா தொற்று கண்டறியப்பட்டுவந்த நிலையில், ஒரே நாளில் அந்த எண்ணிக்கை 4600-ஐ கடந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 74 பேர் உயிரிழந்தனர். சென்னையில் வேறு காரணங்களால் இறந்ததாகக் கூறி, கணக்கில் சேர்க்கப்படாத 444 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்த உயிரிழப்பு 1939-ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் அளவு 3,144-ஆக உள்ளது.
கொரானா இல்லாமல் மரணமடைந்த 444 இறப்பையும் கொரானா மரண லிஸ்ட்டில் தமிழக அரசு சேர்த்துள்ளது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு உள்ளது.
