சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: கொரானா அரசியல்

கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – பினராயி விஜயன்

கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – பினராயி விஜயன்

HOME SLIDER, NEWS, politics
கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார் மாநிலத்தில் புதிதாக 22,414 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 22 பேர் நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 5,431 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தடுப்பூசிகளை வாங்கி கொள்ளுமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கொரோனாவால் மாநிலங்கள் ஏற்கெனவே நிதிச் சுமையில் உள்ளன. மாநிலங்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளிவிடாமல் மத்திய அரசே மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கேரள அரசு இலவசமாகவே தடுப்பூசியை வழங்கும் என்றார். முன்னதாக கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க கோரி பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...
ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது – கமல்ஹாசன்

ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது – கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறிய நடிகர் ரஜினிகாந்த், இன்று உடல்நிலையை கருத்தில் கொண்டு, தான் அரசியலுக்கு வரமுடியவில்லை என பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ‘ ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றம் இருந்தாலும்; அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். அவரது ஆரோக்யம் எனக்கே முக்கியம். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும்’ என்று கூறினார்....
ரஜினியின் முடிவு – ‘மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது’  – திருமாவளவன்

ரஜினியின் முடிவு – ‘மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது’ – திருமாவளவன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  ரஜினியின் முடிவு - 'மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது' - திருமாவளவன் நாலு பேர் நாலு விதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. அதனால் நான் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்திருக்கும் ரஜினியின் முடிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘அரசியலுக்கு வரவில்லை’ என்பது ரஜினியின் முடிவல்ல. பாபாவின் முடிவு. பாபா சொன்னால்தான் எதையும் செய்வேன் என எம்மிடம் ஒருமுறை கூறினார். தற்போது உயர் ரத்தஅழுத்தம் பாபா அவருக்குச் செய்த எச்சரிக்கையென கருதுகிறார் என்று தெரிவித்துள்ளவர், மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது என்று தெரிவித்துள்ளார். கொரோனா சந்தேகத்தினால் மருத்துவமனையில் அட்மிட் ஆனதால், இது ஆண்டவன் எனக்கு கொடுத்த எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன் என்று ரஜினி தெ...
கொரானாவை ஒழிக்கும் அப்பளம்னு அறிமுகப்படுத்திய பாஜக மத்திய அமைச்சரின் முட்டாள்தனம்!

கொரானாவை ஒழிக்கும் அப்பளம்னு அறிமுகப்படுத்திய பாஜக மத்திய அமைச்சரின் முட்டாள்தனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானாவை ஒழிக்கும் அப்பளம்னு அறிமுகப்படுத்திய பாஜக மத்திய அமைச்சரின் முட்டாள்தனம்! ‘பாபிஜி அப்பளம்’ என்ற அப்பளத்தை அறிமுகப்படுத்திய பா.ஜ.க மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்த அப்பளம் கொரானா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் எனத் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரானாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரானாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் கொரானா குறித்து எந்தவொரு தவறான தகவல்களையும் யாரும் பரப்ப வேண்டாம் என்று அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது. ஆனால், அரசின் அறிவுறுத்தலை பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரகத் தொழில்களுக்கான மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பின்பற்றாமல் தவறான தகவலை மக்கள் மத்தியில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'பாபிஜி அப்பளம்' ...
வேறு காரணங்களால் இறந்த 444 மரணங்களையும் கொரானா டெத் லிஸ்ட்டில் சேர்த்த தமிழக அரசு!

வேறு காரணங்களால் இறந்த 444 மரணங்களையும் கொரானா டெத் லிஸ்ட்டில் சேர்த்த தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வேறு காரணங்களால் இறந்த 444 மரணங்களையும் கொரானா டெத் லிஸ்ட்டில் சேர்த்த தமிழக அரசு! தமிழகத்தில் கொரானா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், ஒரே நாளில் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 849 பேர் உள்பட இதுவரை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 492 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, தொற்று படிப்படியாக குறைந்துவரும் நிலையில், ஒரே நாளில் 1171 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் தொடர்ந்து, 10 நாட்களாக நாள்தோறும் மூவாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரானா தொற்று கண்டறியப்பட்டுவந்த நிலையில், ஒரே நாளில் அந்த எண்ணிக்கை 4600-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 74 பேர் உயி...
கொரானாவில் திமுக எம்.எல்.ஏ. பலியானதற்கு ஸ்டாலின் தவறான அணுகுமுறைதான் காரணம் – பகீர் குற்றம் சுமத்தும் முதல்வர்

கொரானாவில் திமுக எம்.எல்.ஏ. பலியானதற்கு ஸ்டாலின் தவறான அணுகுமுறைதான் காரணம் – பகீர் குற்றம் சுமத்தும் முதல்வர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி இன்று கூறியதாவது: *இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே தலைவர் திமுக தலைவர்தான்.* *தான் இருப்பதாக அடையாளம் காட்டுவதற்காகவே ஸ்டாலின் தினந்தோறும் அறிக்கை விடுகிறார்.* *இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கபூர்வமான ஆலோசனை எதையும் வழங்கவில்லை.* *அரசு எதுவுமே செய்யவில்லை என்று, பொய்யான, தவறான குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் முன்வைக்கிறார்.* *மு.க.ஸ்டாலின் சொன்னதை கேட்டு நிவாரணம் தந்த எம்எல்ஏ ஒருவர் கொரோனா பாதித்து உயிரிழந்துவிட்டார்.* *தகுந்த ஆலோசனையின்றி மு.க.ஸ்டாலின் செயல்பட்டதால் ஒரு சட்டமன்ற உறுப்பினரை நாம் இழந்து விட்டோம்.* *கடுமையாக பணியாற்றுவதால் தொற்று பரவுவது குறைக்கப்பட்டு, உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.* *ஊரடங்கு போடப்பட்டு 90 நாட்களாகி விட்டது, இந்த 90 நாட்களை வீணாக்கிவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார்.* *90 ந...
மக்கள் ஒத்துழைப்பு முழுமையாக இல்லாவிட்டால் கொரானா பரவலை தடுப்பது சிரமம் என்கிறார் முதல்வஎ எடப்பாடிபழனிச்சாமி.

மக்கள் ஒத்துழைப்பு முழுமையாக இல்லாவிட்டால் கொரானா பரவலை தடுப்பது சிரமம் என்கிறார் முதல்வஎ எடப்பாடிபழனிச்சாமி.

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      உ மக்கள் ஒத்துழைப்பு முழுமையாக இல்லாவிட்டால் கொரானா பரவலை தடுப்பது சிரமம் என்கிறார் முதல்வஎ எடப்பாடிபழனிச்சாமி. கொரானா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது முதலமைச்சர் கூறியதாவது:- * வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும் * தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் * மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரானா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது * மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் * கொரானா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில்தான் அதிகம் * கொரானாவால் உயிரிழப்போரின் சதவிகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே ...
சென்னையில் கொரானாவை ஒழிக்க கமல்ஹாசன் தொடங்கிய நாமே தீர்வு..!

சென்னையில் கொரானாவை ஒழிக்க கமல்ஹாசன் தொடங்கிய நாமே தீர்வு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கொரானா பிடியில் இருந்து சென்னையை மீட்க நாமே தீர்வு திட்டத்தை தொடங்கினார் மக்கள் நீதி மய்யத் தலைவர கமல்ஹாசன்.   ஜூன் 5ம் தேதியான இன்று உலக சுற்றுச் சூழல் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 'நாமே தீர்வு' என்ற தன்னார்வலர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளார் கமல். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இன்று உலக சுற்றுச்‌ சூழல்‌ தினம்‌. உலகத்தைப் பசுமையாக மாற்றப் பல வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கும்‌ நாம்‌, இன்று நம்‌ சென்னையையும்‌ வேறு ஒரு பச்சைக்கு மாற்ற வேண்டியதிருக்கிறது. கரோனாவுக்கு எதிரான இன்று நடக்கும்‌ போரில்‌ என்ன செய்வார்கள்‌ என்று காத்திருந்தும்‌, ஏதாவது செய்வார்கள்‌ என்று பார்த்திருந்தும்‌ களைத்தவர்களின்‌, நாமாவது ஏதாவது செய்ய வேண்டும்‌ என்ற சிந்தனை தான்‌ நாமே தீர்வு. இந்த நோயின்‌ தீவிரத்தை மருத்துவர்கள்‌ கட்டு...
இனி உலக சுகாதார அமைப்புக்கு நிதி கிடையாது – டிரம்ப் அதிரடி

இனி உலக சுகாதார அமைப்புக்கு நிதி கிடையாது – டிரம்ப் அதிரடி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதால் இனி உலக சுகாதார அமைப்புக்கு நிதி கிடையாது - டிரம்ப் அதிரடி கொரானா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த வைரசின் தீவிரத்தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீது டொனால்டு டிரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அந்த அமைப்பின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்தார். கொரானா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதாரவாக உலக சுகாதார அமைப்பு உள்ளது. எனவே அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ. 3000 கோடி ...
கொரானா தனிமைபடுத்தப்பட்ட முகாமில் அழகிகளின் ஆட்டம்! இது பீகார் ஸ்பெஷல்!!

கொரானா தனிமைபடுத்தப்பட்ட முகாமில் அழகிகளின் ஆட்டம்! இது பீகார் ஸ்பெஷல்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா தனிமைபடுத்தப்பட்ட முகாமில் அழகிகளின் ஆட்டம்! இது பீகார் ஸ்பெஷல்!! கொரானா அறிகுறிகளுடன் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கொரானா முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளும் முறையாக தரப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை நாடு முழுவதும் அமலில் உள்ளது. இந்நிலையில் பீகாரின் சம்ஸ்திபூர் மாவட்டத்தில் காராகா கிராமத்தில் மாநில அரசின் சார்பில் கொரானா முகாம் அமைக்கப்பட்டு கொரானா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தனிமையில் இருக்கும் அவர்களின் பொழுதுபோக்கிற்காக சிலர் பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சி நடத்தி உள்ளனர். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்ப...