செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

கொரானா தனிமைபடுத்தப்பட்ட முகாமில் அழகிகளின் ஆட்டம்! இது பீகார் ஸ்பெஷல்!!

 

 

கொரானா தனிமைபடுத்தப்பட்ட முகாமில் அழகிகளின் ஆட்டம்! இது பீகார் ஸ்பெஷல்!!

கொரானா அறிகுறிகளுடன் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கொரானா முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளும் முறையாக தரப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறை நாடு முழுவதும் அமலில் உள்ளது.

இந்நிலையில் பீகாரின் சம்ஸ்திபூர் மாவட்டத்தில் காராகா கிராமத்தில் மாநில அரசின் சார்பில் கொரானா முகாம் அமைக்கப்பட்டு கொரானா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தனிமையில் இருக்கும் அவர்களின் பொழுதுபோக்கிற்காக சிலர் பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சி நடத்தி உள்ளனர். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “கொரானா முகாமில் இதுப்போன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரானா முகாமில் பொழுது போக்குவதற்காக டிவி வைக்கப்பட்டுள்ளன“ என்றார்.

கொரானா தனிமைபடுத்தப்பட்ட இடத்தில் அழகிகள் டான்ஸ் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

802 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன