செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

கொரானாவில் திமுக எம்.எல்.ஏ. பலியானதற்கு ஸ்டாலின் தவறான அணுகுமுறைதான் காரணம் – பகீர் குற்றம் சுமத்தும் முதல்வர்

 

முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி இன்று கூறியதாவது:

*இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே தலைவர் திமுக தலைவர்தான்.*

*தான் இருப்பதாக அடையாளம் காட்டுவதற்காகவே ஸ்டாலின் தினந்தோறும் அறிக்கை விடுகிறார்.*

*இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கபூர்வமான ஆலோசனை எதையும் வழங்கவில்லை.*

*அரசு எதுவுமே செய்யவில்லை என்று, பொய்யான, தவறான குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் முன்வைக்கிறார்.*

*மு.க.ஸ்டாலின் சொன்னதை கேட்டு நிவாரணம் தந்த எம்எல்ஏ ஒருவர் கொரோனா பாதித்து உயிரிழந்துவிட்டார்.*

*தகுந்த ஆலோசனையின்றி மு.க.ஸ்டாலின் செயல்பட்டதால் ஒரு சட்டமன்ற உறுப்பினரை நாம் இழந்து விட்டோம்.*

*கடுமையாக பணியாற்றுவதால் தொற்று பரவுவது குறைக்கப்பட்டு, உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.*

*ஊரடங்கு போடப்பட்டு 90 நாட்களாகி விட்டது, இந்த 90 நாட்களை வீணாக்கிவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார்.*

*90 நாட்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு அரசு பணியாற்றியதால்தான், தொற்று பரவலை கட்டுக்குள் வைக்க முடிந்துள்ளது.*

*அரசியல் ரீதியாக அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு மு.க.ஸ்டாலின் பொய்க் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.*

*தினந்தோறும் தவறான செய்திகளை மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார் என்கிறார் முதல்வர் பழனிச்சாமி.*

378 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன