சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

ஊரடங்கு நீடிப்பா… மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று மீண்டும் ஆலோசனை!

 

 

ஊரடங்கு நீடிப்பா… மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று மீண்டும் ஆலோசனை!

கொரானா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.34 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு 1.72 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,741 ஆக அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில், ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரஸ் பரவல் இன்னமும் கட்டுக்குள் வராததால் தளர்வுகளோடு ஊரடங்கு நீடிப்புக்கான வாய்ப்பே அதிகம் என கூறப்படுகிறது.

370 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன