சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

மக்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு… அவர்கள் வீதியில் இறங்கி விட்டால் பதவி தப்பாது என பிரதமர் மோடிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது சிவசேனா!

 

மக்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு… அவர்கள் வீதியில் இறங்கி விட்டால் பதவி தப்பாது என பிரதமர் மோடிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது சிவசேனா!

கொரானாவால் மக்களின் வாழ்வாதாரம் இதுவரை இல்லாத அளவுக்கு முடங்கி போயிருக்கிறது. ஆனால் மத்திய பாஜக அரசோ பொருளாதாரசரிவு, மக்களின் சுகாதாரம், வாழ்வாதாரம் என எது குறித்து கவலைப்படாமல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையும், மக்கள் நலனுக்கு எதிரான அவசர சட்டங்களை பிறப்பிப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது.

இது ஒரு புறமிறக்க, பாஜக எம்.பி பிரக்யா தாகூர் அனுமன் மந்திரம் கூறினால் கொரானா போய்விடும் என மக்களிடையே வதந்திகளையும் அலட்சிய மனப்பான்மையையும் ஏற்படுத்தி வருகிறார்.

இதையெல்லாம் கண்டித்துள்ள சிவசேனாவின் சஞ்சய்ராவத், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது

கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மாதச்சம்பளம் பெரும் ஏராளமான மக்கள் வேலையிழந்து ஆசிரமத்தில் இருக்கிறார்கள்.

தொழில் துறை, வர்த்தகத்துறை முடங்கியதால் சுமார் ரூ.4 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படியாக இக்கட்டான சூழல் நிலவும் வேளையில் ரஃபேல் விமானம் வாங்கி குண்டுகள் வீசுவதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலையும் பிரச்னைகளையும் தீர்த்துவிட முடியாது.

அதோடு, பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தின் மூலம் மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டது?
மத்திய அரசு அளிக்கும் வாக்குறுதிகளாலும், நம்பிக்கைகளால் மட்டுமே மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு விடாது. ஏனெனில் மக்கள் தங்கள் எதிர்காலத்தின் பாதுகாப்பற்ற நிலை குறித்து கடுமையான கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

அவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. கொரானாவால் உருவாகியுள்ள வேலையின்மையை அரசு தீர்க்காவிட்டால் பிரதமருக்கு எதிராக மக்கள் போராடும் சூழல் உண்டாகும்.
கொரோனா பரவலை சரிவர கையாளாமல் பொருளாதார சிக்கலையும் இழுத்துவிட்ட இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராடியது போன்று இந்தியாவிலும் நிகழலாம். பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்யக் கோரி மக்கள் முறையிடும் காலமும் கணியலாம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்

368 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன