வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

பாஜக கொள்கையை எதிர்த்த முதல்வர் பழனிச்சாமிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்!

 

 

முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்

மும்மொழி திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மொழிக்கொள்கை மட்டுமல்ல, கல்விக் கொள்கையே கல்வி உரிமையை பறிப்பது என கடிதம் எழுதினோம்.

எதிர்க்கட்சிகளின் கடிதத்தின் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

191 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன