புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

பாதுகாப்புத் துறைக்கு துப்பாக்கி,ரேடார் உட்பட 101 பொருட்கள் இறக்குமதிக்கு திடீர் தடை… கட்டுப்பாடுகள்!

இந்திய பாதுகாப்பு துறையில் ரேடார், துப்பாக்கி உட்பட 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு.

 

இந்திய பாதுகாப்புத்துறைக்கான பெரும்பாலான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு சுயசார்பு-இந்தியா திட்டத்தை நோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதனடிப்படையில் வெளிநாட்டில் இருந்து பாதுக்காப்புத்துறைக்கு இறக்குமதி செய்யும் 101 பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை, அரசு ஆகியவை ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்துத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
360 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன