புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

“தல”அஜீத்துடன் நடிகர் அம்சவர்தனை ஒப்பிட்ட “பீட்ரு” இயக்குனர்!

 

“தல”அஜீத்துடன் நடிகர் அம்சவர்தனை ஒப்பிட்ட “பீட்ரு” இயக்குனர்!

தாதா87 படத்தின் மூலம் சாருஹாசனை தாதா ஹீரோவாக களம் இறக்கி பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் விஜய்ஸ்ரீ இப்போது ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தையும், அம்சவர்தன் நடிப்பில் பீட்ரு படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடை பட்டுள்ளது. அதே நேரம் சமூக வலைதளங்களில் பரபரப்பான கருத்தை வெளியிட்டு அனைவர் கவனத்தையும் ஈர்ப்பது வழக்கம்.

இந்த சூழலில் தனது டிவிட்டர் பக்கத்தில் தல அஜீத்தும், நடிகர் அம்சவர்தனும் குணத்தால் ஒன்று என ஒப்பிட்டு ஒரு பதிவு போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அந்த பதிவில் இயக்குனர் விஜய்ஸ்ரீ கூறியிருப்பதாவது:

“நடிகர் அஜித் பிறருக்கு உதவி செய்வதை விளம்பரம் செய்வது இல்லை, அது போல் நடிகர்
#அம்சவிருதன் பல உதவிகளை செய்வது வருகிறார்.
விளம்பரம் படுத்தாமல் மகிழ்ச்சி.

பிறர் அறிந்து உதவுவது விளம்பரம்!

பிறர் அறியாமல் உதவு
மனிதம் !!

வறுமையின் வடிவத்தை மாற்றும் உங்களுக்கு நன்றி ” என குறிப்பிட்டுள்ளார்.

 

 

983 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன