
எனக்கு இந்தி தெரியாது…நான் இந்தி பேசியதை நிரூபிக்க முடியுமா? – எதிர்க்கேள்வி கேட்ட கனிமொழி
கனிமொழி-யின் இன்றைய பேட்டி :, “சென்னை விமான நிலையத்தில் தமிழ்மொழி அதிகம் தெரிந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பணியில் அமர்த்தப் படுவார்கள் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பது எவ்வளவு பெரிய அவமானம். ப.சிதமபரம், குமாரசாமி உள்ளிட்டோர் தங்களுக்கே இதுபோன்று நடந்துள்ளது என பகிர்ந்துள்ளனர். டெல்லிக்கு சென்று இத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் இந்தி கற்றுக்கொள்ளவில்லை.
தேவிலால் சென்னை வந்தபோது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க வில்லை. எந்த பொதுமேடையிலும் நான் இந்தி மொழிப்பெயர்த்ததில்லை. அப்படி மொழி பெயர்த்திருந்தால் நிரூபியுங்கள். நான் படித்த பள்ளியில் தமிழ் ஆங்கிலம் மட்டும்தான் இருந்தது.
அதைத்தான் நான் கற்றுக்கொண்டேன். இந்தி தெரிந்தால்தான் மொழி பெயர்க்க முடியும். எனக்கு இந்தி தெரியாது என்கிறார் கனிமொழி.
கனிமொழியின் இந்த பதில் அவருக்கு இந்தி தெரியும் என்ற பரப்புரைக்கு பதிலடியாக அமைந்து உள்ளது.
