ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

எஸ்.வி.சேகர் ஜெயிலுக்கு போக ஆசைப்படுகிறார் – அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்

 

 

ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது எஸ்.வி.சேகரின் நீண்ட நாள் ஆசை… அதை அரசு நிறைவேற்றும்” என நக்கல் அடித்த அமைச்சர்.

தேசிய கொடியை அவமதிப்பு செய்தார், முதல்வரை தவறாக விமர்சித்தார் என நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் வந்துள்ளதே… அதன் பேரில் எஸ்.வி.சேகர் கைதாவாரா? என அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்த போது ” தேசிய கொடியை அவமதிப்பு செய்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வரை அவதூறாக பேசினால் ஈசியாக மக்களிடம் தன்னை விளம்பர படுத்திக் கொள்ள முடியும் என்பதால் அவர் அப்படி நடந்து கொள்கிறார்.
அவருக்கு ரொம்ப நாள் ஆசை ஜெயிலுக்கு போக வேண்டும் என்று. அந்த ஆசையை அரசு நிறைவேற்றும்” என நக்கல் அடித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

366 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன