வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 4
Shadow

வாகன ஆவணஙகளையும்,  டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கவும் டிசம்பர் 31வரை கால அவகாசம்

 

வாகன ஆவணஙகளையும்,  டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கவும் டிசம்பர் 31வரை கால அவகாசம் வழஙகி உள்ளது மத்திய அரசு!

 

கொரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து,  பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகு காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை  மத்திய  அரசு நீட்டித்து வருகிறது.  செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதிவரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்களில் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கொரோனா  பெருந்தொற்று சூழல் இன்னும் முழுமையாக நீங்காததால், இதை கருத்தில் கொண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

520 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன