
மாஸ்டர் பட தயாரிப்பாளர் மகளை மணந்த நடிகர் அதர்வா தம்பி!
நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகி உள்ள மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ மக்ள் சினேகா பிரிட்டோ ஏற்கனவே சட்டம் ஒரு இருட்டறை என்ற பெயரில் படம் இயக்கி இருந்தார்.

இவருக்கும் மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷுக்கும் சென்னையில் திருமணம் நடை பெற்றது.
வைரஸ் பீதி காரணமாக மிக குறைந்த எண்ணிக்கையில் உறவினர்கள், நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு சொகுசு ரிசார்ட்டில் இந்த திருமணம் நடை பெற்றது.

