வியாழக்கிழமை, மே 16
Shadow

கைலாசாவில் இயற்கை விவசாயம் செய்ய நிலம் வேண்டும் – நித்திக்கு கடிதம்

 

கைலாசா என்கிற நாட்டை உருவாக்கி உள்ளதாகக் கூறி உள்ள நித்யானந்தா, விநாயகர் சதுர்த்தி அன்று தனது நாட்டிற்கான நாணயங்களை வெளியிட்டு அதிர்ச்சியூட்டினார்.

இதைத்தொடர்ந்து மதுரை ஓட்டல் அதிபர் எங்களது உணவகத்தின் கிளையை கைலாசாவில் தொடங்குவதற்கு அனுமதி வேண்டி நித்யானந்தாவிற்கு கோரிக்கை வைத்தார்.

அந்த கோரிக்கையை ஏற்ற நித்யானந்தா தனது நாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் போது நிச்சயம் அனுமதி தரப்படும் என்றும் மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்றும் உறுதி அளித்தார்.

இந்த விவகாரம் முடிவுக்கு வருவதற்குள் மதுரையை சேர்ந்த இயற்கை விவசாயி பாண்டித்துரை என்பவர் நித்யானந்தாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், பரம்பரைப் பரம்பரையாக விவசாயம் செய்துவரும் குடும்பத்தில், தான் பிறந்துள்ளதாகவும், பொறியியல் படித்துவிட்டு தற்போது இயற்கை விவசாயம் செய்து வருவதாகவும், கைலாச நாட்டில் மதுரை மக்களுக்கு முன்னுரிமை தருவதாகக் கூறியதற்கு இணங்க அந்த நாட்டில் இயற்கை விவசாயம் செய்ய சிறிது நிலம் தருமாறு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.

162 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன