சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

5 ஆண்டுகள்… 58 நாடுகள்… ரூ.517 கோடிகள் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயண செலவாம்!

 

5 ஆண்டுகள்… 58 நாடுகள்… ரூ.517 கோடிகள் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயண செலவாம்!

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியதாவது:-.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு ரூ. 517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 2015 முதல், பிரதமர் 58 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்’’ என கூறி உள்ளார்

இந்த பயணங்களின்போது இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களின் விவரங்களுடன் 2015 மார்ச் முதல் 2019 நவம்பர் வரை பிரதமர் மோடி பார்வையிட்ட நாடுகளையும் அவர் பட்டியலிட்டு உள்ளார்

445 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன