சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

பாடகர் எஸ்.பி.பி மரணம் ! நடிகர் சங்கம் இரங்கல் !!

 

*பாடகர் எஸ்.பி.பி மரணம் ! நடிகர் சங்கம் இரங்கல் !!

இந்தியாவில் புகழ் பெற்ற பாடகரும் நடிகருமான திரு. எஸ்.பி .பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது.

“திரு. எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களது மறைவு செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் அவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினரான அவர் பார்போற்றும் பாடகர் மட்டுமல்ல நடிகராகவும் திறமையை வெளிப்படுத்திய ஒப்பற்ற கலைஞர். அவரது மறைவு திரை உலகிற்கும் , கோடான கோடி இசை பிரியர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது இழப்பால் மீளா துயரத்தில் இருக்கும் குடும்பத்தார் ,உற்றார் ,உறவினர்கள் , ரசிகர்கள் ஆகியோர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டுள்ளது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்”.

#தென்னிந்திய நடிகர் சங்கம்.

362 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன