ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

சர் என எகிறிய வெங்காயம் விலை கிலோ45க்கு விற்க அரசு முடிவு

 

 

சென்னையில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் பெரிய வெங்காயத்தை பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.45க்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் நாளை முதல் கிலோ ரூ.45க்கு பெரிய வெங்காயம் பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படும். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

342 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன