திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை

நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை

விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில், நடிகர் விஜய் திடீரென மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த கூட்டத்தில், மாவட்ட நற்பணி மன்றங்கள் தன்னை அரசியலில் தொடர்புப்படுத்தி போஸ்டர்கள் ஒட்டுவதை அவர் கண்டித்ததாகவும், அத்தகைய போஸ்டர்கள் ஒட்டுவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் என அறிவுறுத்திய விஜய், வழக்கம்போல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும் என உறுதியளித்தாராம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன