வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 4
Shadow

வீட்டிலேயே எளிமையாக நடைபெற்ற காஜல் திருமணம்

வீட்டிலேயே எளிமையாக நடைபெற்ற காஜல் திருமணம்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் முடிவானது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராததால் திருமணத்தை இன்று பிரமாண்டமாக நடத்தாமல் வீட்டிலேயே எளிமையாக நடத்தி இருக்கிறார்கள். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

 

380 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன