வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

சிலிண்டர்கள் வாங்க ஓடிபி கட்டாயம்!

 

சிலிண்டர் விநியோகம், ரயில்கள் நேர மாற்றம், எல்.பி.ஜி விலை நிர்ணயம், வங்கி சேவைக்கு கட்டணம் என பல்வேறு புதிய மாற்றங்கள் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இது சாமானியர்களின் வாழ்வில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இதைப் பற்றி அனைவரும் விரிவாக அறிந்திருக்க வேண்டியது அவசியம்

எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் மூலம் பதிவு செய்வர். இதையடுத்து அவர்களின் வீடுகளுக்குச் சென்று சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். வழக்கமாக ரசீதில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சிலிண்டரை விநியோகம் செய்துவிட்டு ஊழியர்கள் கட்டணம் பெற்றுச் செல்வர். இனி OTP-ம் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரும் நவம்பர் ஒன்றாம் தேதி அமலுக்கு வருகிறது. முதல்கட்டமாக நாட்டின் 100 ஸ்மார்ட் நகரங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறையை DAC என்று எண்ணெய் நிறுவனங்கள் அழைக்கின்றன. சிலிண்டர் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுக்கு OTP எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு வரும்.

இதைக் காண்பித்தால் மட்டுமே இனி சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும். எரிவாயு சிலிண்டர்களை முறைகேடான வகையில் விநியோகித்தல் மற்றும் பயன்படுத்துதலை தடுப்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணிற்கு OTP வரவில்லை எனில், சிலிண்டர் போடுவதற்கு வரும் நபர்கள் ஆப் மூலம் உடனடியாக OTP வருவதற்கு ஏற்பாடு செய்வார்கள். இந்த மாற்றத்தால் முகவரி அல்லது மொபைல் எண் தவறுதலாக அளித்திருப்பவர்களுக்கு சிக்கல் ஏற்படும். அவர்களுக்கு சிலிண்டர்கள் விநியோகிக்க முடியாத நிலை உண்டாகும்.

இண்டேன் எரிவாயு சிலிண்டர்கள் முன்பதிவு செய்வதற்கு புதிதாக ஒரு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 7718955555 என்ற எண்ணிற்கு SMS அல்லது கால் செய்ய வேண்டும். நாடு முழுவதும் இதே எண் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பொதுமக்கள் எந்தப் பகுதியில் வசித்தாலும் மேற்கூறிய எண்ணைத் தொடர்பு கொண்டு இண்டேன் எரிவாயு சிலிண்டர்கள் பெறுவதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இது வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.

278 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன