
தமிழக முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும் இதயம் கனிந்த நன்றி – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை வரும் 10 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது
திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட வேண்டும்
வணிக வளாகங்கள், மல்டிபிளக்ஸ் வளாகங்களில் உள்ள திரையரங்குகளுக்கும் 50% இருக்கை விதி பொருந்தும்.
இந்நிலையில் முன்னாள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை துணை தலைவருமான கலைப்புலி எஸ் தாணு, “தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மார்ச் முதல் அக்டோபர் வரை பல மாதங்களாக திரையரங்குகள் மூடிக்கிடந்தது. தற்போது நவம்பர் 10ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கி பல்லாயிரம் சினிமா துறை மற்றும் திரையரங்க ஊழியர்களின் குடும்பத்தில் விளக்கேற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் , மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
