வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதிலும் தொடர்ந்து பாடுபடுவோம் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நவ.1ஆம் தேதி தமிழ்நாடு தினம் தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதிலும் தொடர்ந்து பாடுபடுவோம் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இந்தியா சுதந்திரம் பெற்று எட்டு ஆண்டு காலம் ஆகியும், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களை உள்ளடக்கி “மெட்ராஸ் பிரசிடென்சி” என்ற பெயரிலேயே செயல்பட்டு வந்தது. இதை மாற்றக்கோரி சென்னை பொட்டி ஸ்ரீராமுலு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் துறந்தார். இதையடுத்து 1953ஆம் ஆண்டு மத்திய அரசால் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, காமராசர் உள்படப் பலர் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாய் 1956ம் ஆண்டு நவ., முதல் தேதி கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் பிரிப்புக்குப் பின் இன்றைய மெட்ராஸ் ஸ்டேட் உருவானது. பின்னர் 1968ல் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நவ. 1 ஆம் தேதியைத் தமிழ்நாடு நாள் என தமிழக அரசு கொண்டாடிவருவதையடுத்து, தலைமை செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் அமைந்தபோது, 1.11.1956 அன்று மெட்ராஸ் மாநிலம் உருவான நாள். நாம் நமது அடையாளமாகப் பெற்றிருக்கின்ற தமிழ் எனும் உன்னத செல்வத்தை வளர்த்தெடுப்பதிலும், தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதிலும் தொடர்ந்து பாடுபடுவோம் என்கின்ற உறுதிமொழியோடு அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

953 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன