வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 7
Shadow

நம்ம(வர்) முதல்வர் கமல்ஹாசன் திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!

 

 

நம்ம(வர்) முதல்வர் கமல்ஹாசன் திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் பரபரப்பு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதை தொடர்ந்து அனைத்து அரசியல்கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கும், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், கமல்ஹாசனும் தனது கட்சிப் பணியைத் தொடங்கியுள்ளார். தனது கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் தொகுதி வாரியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கமல் ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், திருச்சி கிழக்கு தொகுதியிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அரசாள காத்திருக்கும் நம்ம(வர்) முதல்வர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

372 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன