
பா.ஜனதா கட்சியின் முக்கியத் தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா வருகிற 21-ந்தேதி தமிழகம் வருகிறார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் எல். முருகன் நேற்று தெரிவித்தார். மேலும், அமித் ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ‘‘அல்வா விற்பதைப் போன்ற பெரும் கதை ஒன்றை சொல்ல வருகிறார் அமித்ஷா. இதற்கு முன் பலமுறை தமிழகம் வந்த அமித் ஷா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’’ என்றார்.
545 Views
