புதன்கிழமை, மே 20
Shadow

ஹாலிவுட்டை ஓரம் கட்டி அமேசானில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சரித்திரம் படைத்த சூரரை போற்று

ஹாலிவுட்டை ஓரம் கட்டி அமேசானில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சரித்திரம் படைத்த சூரரை போற்று

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வாழ்க்கை வரலாறு படமாக உருவான சூரரைப்போற்று அமேசான் தளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

தியேட்டரை குறி வைத்து உருவான சூரரைப்போற்று திரைப்படம் எதிர்பாராத சிக்கல்களால் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியானது.

ரசிகர்கள் பெரிய அளவில் கவலை அடைந்தாலும் சூர்யா நடிப்பில் புதிய படத்தை பார்க்க போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் அமேசான் தளத்தை நோக்கி ரசிகர்கள் பெரிய அளவில் படையெடுக்க ஆரம்பித்தனர்.

இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு அமேசான் தளத்தில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால் சர்வரே திணற… அதுமட்டுமல்லாமல் இதுவரை அமேசான் தளத்தில் வெளியான ஹாலிவுட் படங்களுக்கு கூட இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்கிறார்கள்.

தற்போது சூரரைப்போற்று படம் அமேசான் தளத்தில் கிட்டத்தட்ட 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. சூரரை போற்று படத்தின் மூலம் நல்ல லாபம் பெற்றுள்ளதாம் அமேசான்.

 

393 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன