சனிக்கிழமை, செப்டம்பர் 19
Shadow

தெலுங்கில்  பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சாயிஷா

நடிகை சாயிஷா தெலுங்கில்  பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக  நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை சாயிஷா  வனமகன் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .அதனையடுத்து தமிழ், தெலுங்கு,, கன்னடம்  ஆகிய மொழிகளில்  ஒரு சில படங்களில் நடித்த இவர் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடித்து வரும் சாயிஷா தற்போது ஆர்யாவுடன் இணைந்து டெடி படத்தில் நடித்து முடித்துள்ளார் . அதனையடுத்து  தெலுங்கு, கன்னடத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் சாயிஷா தெலுங்கில் 60 வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தில் நாயகியாக நடிக்க சாயிஷா கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .போயப்படி சீனு இயக்கும் இந்த படத்தினை  துவாராகா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.சமீபத்தில்  இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.இந்த படம் இரண்டு கதாநாயகிகள் என்ற கான்செப்ட்டை கொண்டது .எனவே  பல முன்னணி நடிகைகளிடம் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.அந்த வகையில் இப்படத்தின் ஒரு கதாநாயகியாக சாயிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன