
நடிகர் ஜெய் , தளபதியின் பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதனையடுத்து சென்னை 28,வாமனன், சுப்பிரமணியபுரம் ,வடகறி,ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார்.இந்த நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் தனது 30வது படத்தை நடித்து முடித்துள்ளார் .
இயக்குனர் சுசீந்திரன் தற்போது சிம்புவின் ஈஸ்வரன் படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும், தற்போது அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததது . எஸ்.ஐஸ்வர்யா என்ற அறிமுக தயாரிப்பாளர் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடிக்க சத்ரு, சரத்,காளி,பால சரவணன்,முத்துக் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.இந்த படத்தில் ஜெய் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார் .இவர் இசையமைப்பாளர் தேவாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது .ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் ரீலீஸ் தேதி,இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது
