

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில் வரும் நவம்பர் 22 அன்று நடைபெற உள்ளது.
துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிங்காரவடிவேலன் வெளியிட்ட நிழல் பட்ஜெட்!
சுயேச்சையாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் R.சிங்காரவடிவேலன் கடந்த இரு வார காலமாக தயாரிப்பாளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்டு வந்தார்.
“வெற்றி பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்..?” என எல்லோரும் கேட்ட கேள்விக்கு பதிலாக சங்கத்தின் நிழல் பட்ஜெட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சங்க வருமானத்திற்கான வழிமுறை, அதற்குரிய செலவு கணக்கு, இரண்டையும் புள்ளி விபரங்களுடன் வெளியிட்டு இருப்பது தேர்தல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரையிலும் நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் போட்டியிட்ட அணியோ அல்லது தனிப்பட்ட நபர்களோ இது போன்ற நிழல் பட்ஜெட்டை வெளியிட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வருடத்திற்கு 27 கோடியே 72 லட்சம் ரூபாய் வருவாய், வருடாந்திர செலவு 24 கோடியே 50 லட்சத்து 50,000ம் ரூபாய் மிஞ்சும் தொகை 3,13,50,000ம் ரூபாய் என சங்கத்தின் வரவு, செலவு கணக்கைக் கணக்கிட்டுள்ளார் சிங்காரவடிவேலன்.
