
உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை சென்னை வரும் நிலையில் இன்று அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை சென்னை வர உள்ள நிலையில், தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், இன்று சென்னையில் நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கு, இன்னும் ஐந்து மாதங்களே உள்ளன. அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளை துவக்கி உள்ளன.உரசல்மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.,விற்கு, தற்போது தமிழகத்தில், ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லை. வரும் சட்டசபை தேர்தலில், கணிசமான எண்ணிக்கையில், எம்.எல்.ஏ.,க்களை பெறுவதற்கான, பல்வேறு பணிகளை, பா.ஜ., தேசிய தலைமை துவக்கி உள்ளது.தினமும் மாற்று கட்சியில் உள்ளவர்களை, கட்சியில் இணைக்கும் பணி நடந்து வருகிறது. அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும், முகவர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர். தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இடம் பெற்றிருந்தாலும், வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்காதது உட்பட, பல்வேறு பிரச்னைகளில், இரு கட்சியினருக்கும் இடையே, உரசல் ஏற்பட்டுள்ளது. முக்கிய முடிவுஇந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை சென்னை வருகிறார். அவர், சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை முடிவு செய்யவும், தேர்தல் பணிகள் குறித்து, கட்சியினருக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கவும் உள்ள தாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.அமித் ஷா நாளை சென்னை வர உள்ள நிலையில், அ.தி.மு.க., மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், இன்று மாலை, 4:30 மணிக்கு, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ளது.கூட்டத்திற்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர், தலைமை வகிக்க உள்ளனர்.
தேர்தல் பணி குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பா.ஜ.,வுடன் கூட்டணியை தொடர்வது குறித்தும், முக்கிய முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது. அமித் ஷா நிகழ்ச்சிகள் என்ன? * மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை தனி விமானத்தில், டில்லியில் இருந்து புறப்பட்டு, பகல், 1:00 மணிக்கு, சென்னை வருகிறார்.விமான நிலையத்தில், பா.ஜ., சார்பில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.* வரவேற்பு முடிந்ததும், காரில் ஹோட்டல் லீலா பேலஸ் செல்கிறார்.
மாலை, 4:30 மணிக்கு, கலைவாணர் அரங்கில் நடக்கும், அரசு விழாவில் பங்கேற்கிறார்* விழா முடிந்து மாலை, 6:00 மணிக்கு, ஹோட்டல் திரும்புகிறார். அங்கு, பா.ஜ., நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இரவு அங்கு தங்குகிறார். மறுநாள் காலை, 10:00 மணிக்கு, சென்னையில் இருந்து, டில்லி புறப்பட்டு செல்ல உள்ளார்* சென்னை வரும் அமித்ஷாவை, முதல்வர் பழனிசாமி., – துணை முதல்வர் பன்னீர்செல்வம், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேச உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
