
சட்டமன்ற தேர்தலுக்கான 100 நாள் பிரசாரத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று திருக்குவளையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.
இதையடுத்து, அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை விடுவிக்கக்கோரி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கைது செய்தாலும் திமுகவின் பிரசார பயணம் தொடரும் என்றும், திமுகவின் பிரசாரத்தை தடுக்க அரசு முயற்சிப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
284 Views
