ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 9
Shadow

ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் மிருகம் 2

சாமி இயக்கத்தில் ஆதி, பத்மபிரியா ஜோடியாக நடித்து 2007-ல் திரைக்கு வந்த படம் மிருகம். போதை, பெண்களுடன் தகாத உறவு, ரவுடித்தனம் என்று மிருகத்தனமாக திரியும் இளைஞன் எய்ட்ஸ் நோயில் சிக்கி எப்படி சீரழிகிறான் என்பது கதை. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. வசூலும் பார்த்தது. தற்போது மிருகம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் கதாநாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார்.

இதுகுறித்து ஆர்.கே.சுரேஷ் கூறும்போது, “மிருகம் படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிப்பது பெருமையாக உள்ளது. திரைக்கதை முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்கும். இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும்” என்றார்.

343 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன