
சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாநாடு. ஊரடங்கிற்கு முன்னர் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து மாநாடு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்தது. ஊரடங்கிற்குப் பின்னர் இந்தப் படவேலைகள் அப்படியே நின்றது. இதனால் சுசீந்திரன் இயக்கத்தில் 40 நாட்களில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார் சிம்பு.
‘ஈஸ்வரன்’ படத்தை முடித்த கையோடு நவம்பர் 9-ம் தேதியிலிருந்து பாண்டிச்சேரியில் தொடங்கிய ‘மாநாடு’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. சிலம்பரசன் முதல்முறையாக அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடித்திருக்கும் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் சிம்பு தலையின் ஒரு பக்கத்திலிருந்து ரத்தம் வழிய, அவர் கைகளை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தலையில் புல்லட் பாய்ந்து ரத்த காயங்களுடன் சிம்பு இருக்கும் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் #maanaadufirstlook என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது.
463 Views
