புதன்கிழமை, ஆகஸ்ட் 12
Shadow

‘சூரரைப் போற்று’ படத்தில் வந்த பெண் பைலட் ரீல் இல்ல ரியல் பைலட்!

 

சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தில் இறுதி காட்சியில் வரும் பெண் பைலட் நிஜத்திலும் பைலட் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளி விருந்தாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் நெடுமாறானாக சூர்யா, பொம்மியாக அபர்ணா பாலமுரளி என்று நடித்த அனைவரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.

ஒரு காட்சிக்கு வந்தாலும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் க்ளைமேக்ஸ் காட்சியில் வந்த பெண் பைலட் ஒருவர்.

இவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் பைலட் தான். இவர் பெயர் வர்ஷா. இண்டிகோ விமானத்தில் பைலட்டாக இவர் உள்ளார்.

சென்னையில் வசித்து வரும் இவரது கணவர் லோகேஷ் என்பவரும் பைலட் தான். இவரது பூர்விகம் கேரளா.

சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா கேட்டுக் கொண்டதற்காக சிறப்பு விருந்தினராக இந்த படத்தில் நடித்து கொடுத்துள்ளார்.

 

424 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன