சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுவடைய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும்.

மேலும், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் டிசம்பர் 2-ந்தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

198 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன