புதன்கிழமை, ஜூன் 10
Shadow

ஈஸ்வரன் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும்!

நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டததை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் சென்சாருக்கு சென்று ரிலீசுக்கு தயாராகி விடும் என்றும் கூறப்படுகிறது

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வந்தாலும் சிம்புவின் ஈஸ்வரன் படமும் பொங்கலுக்கு வரும் என்றும் விஜய்யுடன் மோத ஈஸ்வரன் குழுவினர் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது

அந்த வகையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் தொடங்கிவிட்டனர் புரமோஷன் பணியின் அடுத்தகட்டமாக ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் இந்த பாடலும் ரசிகர்களை ரசிகர்களை திருப்தி படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

280 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன