புதன்கிழமை, ஜூன் 10
Shadow

‘பயோ பபுள்’ பாதுகாப்புடன் டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ள ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு

‘பயோ பபுள்’ பாதுகாப்புடன் டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ள ‘அண்ணாத்த’

ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு வரும் டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ளது

நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தைச் சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தின் இசையமைப்பை டி இமான் கவனிக்க இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வந்தது. ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் 60 வயதைக் கடந்த முதியோர்கள் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ரஜினிகாந்த் 60 வயதைக் கடந்தவர் என்பதாலும் அவருக்கு சில மருத்துவ பிரச்சினைகள் உள்ளதாலும் படப்பிடிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் சிவா வரும் 15 ஆம் தேதி முதல் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்துக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இந்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த படப்பிடிப்பு பலத்த பாதுகாப்பு அம்சங்களுடன் நடைபெற உள்ளது.

படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது, அதற்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது. ” ‘அண்ணாத்த’ படத்தின் மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்பையும் முழுக்க முழுக்க ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியிலேயே நடத்த திட்டமிட்டுள்ளோம். ஐதராபாத் செல்ல ரஜினி சாருக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் அனைவரையுமே ஒரு பயோ பபுளுக்குள் கொண்டுவர உள்ளோம். கடந்த ஐபிஎல் தொடரில் அதே பயோ பபுள் ஏற்பாடுகள்தான் ‘அண்ணாத்த’ டீமிற்கும் செய்யப்படவுள்ளது. அந்த பயோ பபுளில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்களுக்கு அந்த ஓட்டல், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. அதேபோல் பயோபபுளில் இருப்பவர்கள் யாரும் வெளியேபோய்விட்டு மீண்டும் உள்ளே நுழையவும் முடியாது.

மருத்துவர்களின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட சில நாள்களில் கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். தீவிர பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் 14-ம் தேதியில் இருந்து 40 நாள்கள் ரஜினி சாரின் ஷூட்டிங் இருக்கும். அதன் பின், அவர் சென்னை திரும்பிவிடுவார். படத்தை 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

268 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன